Connect with us

எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.. தனுஷை கைகாட்டிய மஞ்சு வாரியர்.. ஓ இதுதான் விஷயமா..?

CINEMA

எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.. தனுஷை கைகாட்டிய மஞ்சு வாரியர்.. ஓ இதுதான் விஷயமா..?

அசுரன் திரைப்படத்தில் தன் நடித்ததற்கு காரணமே நடிகர் தனுஷ் தான் என்று மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கின்றார்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சில காலங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். பின்னர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள், அழுத்தமான திருத்தமான படங்களில் மிகவும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.

இதனால் இவர் நடிக்கும் மலையாள படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. கேரளா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலம் இருக்கின்றது. தமிழில் இவர் என்ட்ரி கொடுத்த திரைப்படம் அசுரன். அதில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் திருமண வயதில் உள்ள மகனுக்கு தாயாக நடித்து முதிர்ச்சியான நடிப்பாலும் அசத்தியிருப்பார்.

   

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். மேலும் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார், பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி அருணாச்சலம், டிஜே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

 

இப்படம் 2019 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோவானது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது எனது குழந்தை பருவத்தில், அதாவது 10 வயது வரை இருந்ததெல்லாம் தமிழ்நாட்டில் தான். அதனால் தான் எனக்கு தமிழ் சரளமாக பேச வருகின்றது.

மேலும் முதலில் அசுரன் திரைப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் தான் காரணம். எனக்கு கதை ஒன்று இருக்கின்றது, நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார். அதன் பிறகு தான் இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு கதையை கூறினார். இந்த திரைப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் யார் என்று கேட்டால் அது தனுஷ் தான் என்று பதிலளித்திருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top