Connect with us

நான் 35 வயதுக்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்.. என்னோட ஆசை, விருப்பம் இதுதான்.. ஷாக்கிங் நியூஸ் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகை..!

CINEMA

நான் 35 வயதுக்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்.. என்னோட ஆசை, விருப்பம் இதுதான்.. ஷாக்கிங் நியூஸ் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகை..!

தன்னுடைய 35 வயதுக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று துஷாரா விஜயன் கூறி இருக்கின்றார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் துஷாரா விஜயன். இப்படி கூறுவதை காட்டிலும் மாரியம்மா என்று கூறினால் பலருக்கும் இவரை அடையாளம் தெரிந்துவிடும். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர். மிக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

   

இது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இதில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகி மக்களிடையே சக்க போடு போட்டது. அதைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நட்சத்திரம் நகர்கின்றது என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

 

ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் சினிமாவிற்குள் அறிமுகமானார். இருப்பினும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதைத் தொடர்ந்து அநீதி, கழுவேத்தி மூர்க்கண் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் துஷாரா விஜயன் ராயன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் ராயன் இசை வெளியீட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா தெரிவித்திருந்ததாவது “தன்னுடைய 35 வயது வரைக்கும் தான் நான் சினிமாவில் நடிப்பேன். அதற்கு பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என்று அவர் கூறியிருக்கின்றார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top