‘அசுரன்’ பட மஞ்சு வாரியருக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காரா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on கார்த்திகை 4, 2023

Spread the love

மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகைகலிள் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் இறுதியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

   

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார். பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2015ல் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

இதனை அடுத்து திலீப் நடிகை காவிய மாதவனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி தந்தை உடன் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.