Former Hero

நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் மாட்டிக்கொண்ட மற்றொரு மாஜி ஹீரோ, கணவரிடம் காட்டிக்கொடுத்த கம்மல் – ஓட்டம் பிடித்த நடிகர்

By admin on கார்த்திகை 4, 2023

Spread the love

சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பல நடிகர்கள், உண்மையில் கதாநாயகன் இல்லை. சமீபத்திய உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் அப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தில்தான் சிக்கி இருக்கிறார். அவரை போலவே, மற்றொரு மாஜி ஹீரோவின் லீலைகளும், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இவரும், தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ தான்.

இப்போதும் வில்லனாக நடித்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாட்டில் நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்துக்கொள்ள விமானத்தில் சென்று இருக்கிறார். அதிகாலை 4.30 மணிக்கு, அந்த விழாவை ஏற்பாடு செய்த ஒரு பெண்மணி, அவரை ஏர்ப்போர்ட்டில் இருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதற்குள் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, அந்த அறையில், அந்த நடிகருடன் அந்த பெண்மணி, தங்கிவிட்டுச் சென்று இருக்கிறார்.

   

 Former Hero

   

அந்த பெண்மணி, அந்த நாட்டில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர். கணவர், பெண் பிள்ளை உள்ளது. அங்கு நடக்கும் முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்சினிமா கலைஞர்களை அங்கு அழைத்து விழா நடத்துவது அவரது வழக்கம். வங்கியிலும் பணிபுரிந்து இருக்கிறார். அன்று மாலை, அந்த விழாவில் கலந்துக்கொள்ள அந்த நடிகரை அழைக்க, அந்த பெண்ணின் கணவர் ஓட்டலுக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு நடிகரின் படுக்கை அறையில் மனைவியின் ஒற்றை கம்மல் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அதை எடுத்து பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

 

 Former Hero

பிறகு வீட்டில் மனைவியிடம் விசாரித்த போது, தகராறு முற்றியிருக்கிறது. எனினும் பெண் குழந்தை இருப்பதால், அவர் அதற்கு மேல் பிரச்னையை பெரிதுப்படுத்தவில்லை. ஆனால், அந்த பெண்மணியே, இதுகுறித்து சிலரிடம் கூற, அது பெரிய அளவில் மற்றவர்களுக்கு தெரிந்துவிட, அந்த கணவர், அந்த பெண்ணை விவாகரத்தும் செய்துவிட்டார்.

இதற்கிடையே கோல்டன் விசா வாங்க அங்கு சென்ற அதே நடிகர், ஓட்டலில் தங்கியிருந்ததை அறிந்த அந்த பெண்ணின் கணவர், ஓட்டல் எண்ணில் அழைத்து கண்டபடி திட்டியுள்ளார். இருடா, நேரில் வருகிறேன் என்ற அவரது மிரட்டலுக்கு பயந்த அந்த நடிகர் கோல்டன் விசாவை வாங்கிய அடுத்த நிமிடமே, விமானத்தில் ஏறி, தப்பிச்சோம், பிழைச்சோம் என தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டாராம். ஹீரோக்கள் எல்லாம், திரையில்தான். நிஜத்தில் வில்லன்களை விட மிக மோசமானவர்களாக தான் இருக்கின்றனர்.