விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 35 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்தபிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் என 5 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு 5 போட்டியாளர்கள் வெளியேற, பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்தவர்களை எதிரிகளாகவே நடத்தி வருகின்றனர் பிக் பாஸ் ஹவுஸ்மாட்ஸ்.

இந்நிலையில் வந்த முதல் வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளரான அன்னபாரதி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை. நீங்க யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய போனா நல்லா இருக்கும்னு நெனைக்குறீங்கன்னு கமெண்ட்-ல சொல்லுங்க.
