தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். அந்தத் திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதனை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ஒரு குப்பை கதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மனிஷா யாதவ் இடையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் ஒன்றை அழைத்திருந்தார். சென்னை 600028 இரண்டாம் பாகத்தின் ஹீரோயின் நான்தான் எனக் கூறி படப்பிடிப்பை தொடங்கியதாகவும் ஆனால் படத்தில் என்னை ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஐட்டம் நடிகையாக படத்தில் காட்டி இருக்கிறார்.
இது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என புகார் அளித்திருந்தார். இது அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வார்னெட் ஜெயின் என்ற நபரை மனுஷா யாதவ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மனிஷா யாதவ் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கு எண் 18/9 படத்தில் ஸ்கூல் பொண்ணா நடிச்சவங்களா இவங்க என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.