மதகஜராஜா-வுல இருந்து கொஞ்சம் எடுத்து தான் கலகலப்பு 3 படத்தோட கதையை எழுதுனாரு.. சுந்தர் சி-ஐ பங்கம் செய்த நடிகர் ஜீவா..!

By Nanthini on பங்குனி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

   

குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

   

 

 

Sundar c Jai jiiva srikanth movie title announced viral poster

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில், மதகஜராஜா படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் வைத்து கலகலப்பு 3 எடுக்கலாம் என்று சுந்தர் சி சார் என்னிடம் சொன்னாரு. மதகஜராஜா திரைப்படம் வெளியாகாது போல அதனால அதுல ஒரு சின்ன சீன் இருக்கு அதை வச்சு கலகலப்பு 3 எடுக்கலாம் என்று சொன்னாரு.

அப்பட்டமா சுந்தர்.சியை மாட்டிவிட்ட ஜீவா… கலகலப்பு3க்கு மூடுவிழா வச்சிட்டாரு போலயே! | kalakalappu 3 movie is the story of madhagajaraja jivva opensup

அதுக்குள்ள தான் மதகஜராஜா திரைப்படம் வெளியாகிவிட்டது. அது நல்ல வரவேற்பு கிடைத்து விட்டதால் தற்போது அந்த கதையே மாறி கலகலப்பு 3 அடுத்த வருஷம் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. நடுவுல என்கிட்ட படம் எடுப்பது பற்றி பேசினாரு. ஆனா எனக்கு சில படங்கள் இருந்ததால் நடிக்க முடியல. இந்த படத்துல நடிக்க நானும் பெரிய சம்பளம் கேட்டு இருக்கேன். விரைவில் கலகலப்பு திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க தான் போகிறேன் என்று ஜீவா பேசியுள்ளார்.