இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இவருடைய நடிப்பு அனைவரையும் அசர வைத்த நிலையில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.
இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார். ஹிந்தியில் யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜா சாப் மற்றும் கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் மலையாள திரை உலகில் மூத்த முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக தற்போது மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம்தான் ஹிருதயபூர்வம். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மோகன்லாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அப்படி வெளியானால் மோகன்லாலுடன் மாளவிகா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இது ஆகும்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…