Categories: சினிமா

நாசரால் நடிப்பை தொடங்கி.. இன்று வில்லன், விநியோகஸ்தர் என பல பகுமானங்களில் இருக்கும் ஆடுகளம் நரேன் பற்றி சுவாரஸ்ய தகவல்..!

Spread the love

ஆடுகளம் நரேனும் வெற்றிமாறனும் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள். அதனால்தான் வெற்றிமாறன் படங்களில் கண்டிப்பாக ஆடுகளம் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஆடுகளம் நரேன், நடிகர் நாசரின் திறமையை பார்த்து அவரைப்போல் ஒரு நடிகராகிவிட வேண்டும் என்பதற்காக தான் சினிமாவில் நடிக்கவே வந்தார். பின்நாட்களில் தனது திறமையை பயன்படுத்தி தற்போது இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு தன்னுடைய அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனிடையில் சில திரைப்படங்களை வாங்கி விநியோகஸ்தகம் செய்யும் விநியோகஸ்தராகவும் செயல்பட்டவர். இவருடைய இயற்பெயர் நாராயணன். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை நரேன் என்று மாற்றிக் கொண்டார். இவரின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தனுசுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ஆடுகளம் நரேன் என்ற பெயர் வந்தது. முதலில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் நடிப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு எடுத்து வருகின்றார். இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிகர்களுக்கு எடுத்துரைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக அஞ்சாதே, ஆடுகளம், நண்பன், மனம் கொத்தி பறவை மற்றும் நையாண்டி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தனுஷின் நையாண்டி திரைப்படத்தில் நஸ்ரியாவின் தந்தையாக நிறைய நடித்திருப்பார். இவர் முதன்முதலில் ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு புகழைத் தேடித் தந்தது தனுஷின் ஆடுகளம் திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு தான் இவர் அனைவராலும் ஆடுகளம் நரேன் என்று அழைக்கப்பட்டார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை பக்கமும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இன்றும் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.  ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி நாடகப் பள்ளியில் ஆசிரியராக, உதவி இயக்குனராக, விநியோகஸ்தராக, குணச்சித்ரா நடிகராக, வில்லன் நடிகராக உயர்ந்த இவ்வளவு பெரிய நிலையை இவர் அடைந்திருந்தாலும் சமீபத்தில் இவர் அளித்திருந்த பேட்டியில், நான் நடிகரான அதற்கு எனது திறமை மட்டும் காரணம் அல்ல என்னை ரசித்த ரசிகர்களும் முக்கிய காரணம் அவர்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று பேசி இருந்தார்.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

8 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

8 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

8 மணத்தியாலங்கள் ago