CINEMA
யோகி பட நடிகையா இது?.. திருமணமாகி இவருக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
வித்தக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான குடைக்குள் மழை என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் தெலுங்கு நடிகை மதுமிதா. இவர் சினிமாவிற்காக தன்னுடைய பெயரை மதுமிதா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஹைதராபாத் என்பதால் தன்னுடைய திரை பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்து ஆரம்பித்தார். முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சந்ததே சந்ததி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
அந்தப் படத்தை தொடர்ந்து ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இங்கிலீஷ் காரன், குடைக்குள் மழை, யோகி மற்றும் தூங்கா நகரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இவர் தமிழில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்த சிவ பாலாஜியை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் இவர் சினிமாவை விட்டு விலகாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட மதுமிதா தற்போது தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் தெலுங்கானாவில் வசித்து வருகின்றார்.
இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இவர் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நேற்று மதுமிதா தனது பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளனரா என்று கமாண்ட் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க