#image_title
தமிழ் சினிமாவில் நடிகை கோவை சரளா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர். நகைச்சுவை நடிகை மனோராமவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகையா திகழ்ந்து வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 9 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து விட்டவர்.
குறிப்பாக இவர் நடிகர் கவுண்டமணி, நடிகர் வடிவேலு, நடிகர் செந்தில் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்பொழுதும் அந்த காமெடிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர் என்றால் அது மிகையாகாது.
#image_title
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நடிகர் கவுண்டமணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபர்ஸ்ட் டைம் போகும் போது, அவர் என் பேரு என்னனு கேட்டாரு. கோவை சரளா ன்னு சொன்னேன். அது என்ன கோவை சரளா..? அப்படின்னு கலாய்ச்சாரு. அத நீங்க பத்திரிக்கையாளர் கிட்ட தான் கேக்கணும்னு சொல்லிட்டேன். எப்பயும் அதே போல கிண்டலா தான் பேசிப்போம். அப்படியே ஒரு அண்ணன் தங்கை உறவு எங்களுக்குள்ள வந்துருச்சு’ என்று மனம் திறந்து கூறியிருந்தார். இதோ அந்த பேட்டி…
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…