பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான்.
தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில்இறுதியாக ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.