இந்தியாவில் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் வேறு சில நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் அம்பானி. இவரது மனைவி நீட்டா அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி ஆனந்த் அம்பானி ஈஷா அம்பானி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அம்பானிக்கு மும்பையில் மிகப்பெரிய சொகுசான ஒரு ஆடம்பர பங்களா இருக்கிறது. இதன் பெயர் Antilia வீடு என்பதாகும். இந்த வீட்டின் மதிப்பு 15,000 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
மும்பையில் அமைந்திருக்கும் முகேஷ் அம்பானியின் இந்த ஆண்டிலியா வீடு 500 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 27 மாடிகளை கொண்டு இருக்கிறது. 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு முழு நேரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த 27 மாடிகள் கொண்ட வீட்டில் முதல் ஏழு தளங்கள் வரை கார் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தில் உள்ளவர்கள் புதிது புதிதாக வரும் கார்களை வாங்குவார்கள். அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி நிப்பாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு வேலை பார்க்கும் 600 பணியாளர்களுக்கும் உள்ளேயே அறைகள் கட்டப்பட்டிருக்கிறது. இது தவிர நிகழ்ச்சிகள் நடத்த பெரிய பார்ட்டி ஹால், 50 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், நீச்சல் குளங்கள், ஜிம், ஸ்பா, கோயில், எமர்ஜென்சி மருத்துவமனை ஆகியவை இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இங்கு ஒரு பனியறையும் இருக்கிறதாம். இந்த அறையின் சுவற்றில் இருந்து பணி உருகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் எட்டு அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டிடம் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 3 ஹெலிகாப்டர் வந்து நிற்கும் ஹெலிபேட் வசதியும் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் விலைமதிப்புள்ள வீடாக முகேஷ் அம்பானியின் Antilia வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.