பாலிவுட்டை நம்பி மோசம் போன இயக்குனர் அட்லீ.. பேபி ஜான் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா..?

By Nanthini on டிசம்பர் 29, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம். அட்லியின் பிறை வாழ்வில் அவருடைய இரண்டாவது படம் தான் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில் விஜயின் மகளாக நடிகை மீனாவின் மகள் நடித்திருப்பார். தற்போது அட்லீ பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருந்தார். அதன் பிறகு இந்தி திரை உலகில் தன்னுடைய தெறி படத்தை ரீமேக் செய்து அதனை தானே தயாரித்து வெளியிடவும் செய்தார்.

தெறி ரீமேக்!.. ஹிந்தியில் பட்டையை கிளப்பியதா பேபி ஜான்?.. வசூல் விவரம்  இதோ..!

   

அவரது இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சல்மான்கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் வைத்து பான் இந்தியா படம் எடுக்க அட்லி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பேபி ஜான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பேபி ஜான் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து உள்ள அட்லி இப்படம் மூலம் இந்தி திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

   

அடித்து நொறுக்கினாரா அட்லி.. தயாரிப்பாளராக கிடைத்த லாபம் எவ்வளவு? பேபி  ஜானின் பாக்ஸ் ஆஃபிஸ்?

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேபி ஜான் திரைப்படம் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கியுள்ளது. இந்த திரைப்படம் சுமார் 160 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியாகி நான்கு நாட்களில் இதுவரை வெறும் 23.90 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வெறும் 60 கோடி மட்டுமே வசூலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 100 கோடி வரை நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.