கழுத்தில் தாலியுடன் சல்மான் கானுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வீடியோ..!

By Nanthini on மார்கழி 24, 2024

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

அந்த முன்னணி நடிகரை இயக்க எனக்கு ஆசை.. நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி

   

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

   

Keerthy Suresh: பேபி ஜான் வருண் தவான், கீர்த்தி சுரேஷின் கலக்கல் ஸ்டில்ஸ் - baby john stars varun dhawan, keerthy suresh pictures - Samayam Tamil

 

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில்இறுதியாக ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் எந்த வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க - விடுப்பு.கொம்

 

இந்த நிலையில் பேபி ஜான் என்ற திரைப்படம் மூலமாக ஹிந்தியில் நுழைந்துள்ள கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தெறி படத்தில் சமந்தா நடித்த ரோலில் தான் ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சல்மான்கானுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.