‘நீங்க இல்லைனா நாங்க இல்ல’… திடீரென எமோஷனலாக வீடியோ வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்… எதுக்குன்னு தெரியுமா…?

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

   

இவர் நடிப்பில் வெளிவந்த மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் இறுதியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. நடிகை கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்கா உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்பொழுது 10 வருடங்களை சினிமாவில் கதாநாயகியாக கடந்திருக்கிறார். சினிமாவில் 10 வருடங்களை தொட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் எமோஷனலான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ”  அவரது அப்பா அம்மா ஆகியோருக்கு நன்றி கூறி, இத்தனை வருடங்கள் ஆதரவளித்த மக்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார். மேலும் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரியதர்ஷன் தான் அவரின் குரு எனவும் கூறியுள்ளார்.

“நீங்கல்லாம் இல்லனா நாங்க இல்ல” என்னும் வரியோடு ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரின ஃபேன்ஸ்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார். மேலும் இதே போல எப்போதும் மக்களை என்டர்டைன் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இப்பொழுதுதான் சினிமாவில் பயணத்தை தொடங்கியது போல இருக்கிறது ஆனால் பத்து வருடம் முடிந்து இருக்கிறது என எமோஷனலாக பேசி அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதோ அவரின் வைரல் வீடியோ…