‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து,
சமீபத்தில் இவர்களது திருமணமும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் சில பெண்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் சிலர் ‘இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று விமர்சித்தும் வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுத்தார் நடிகர் அசோக் செல்வன். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். தற்பொழுது தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர அது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.