12 வருடங்களுக்கு பிறகு பிறந்த செல்ல மகள்.. முதன் முறையாக வெளியுலகத்திற்கு காட்டிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..

Spread the love

மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்  நடிகை காயத்ரி, இந்த நிகழ்ச்சியின் மூலம்  டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினார்.அதைத்தொடர்ந்து சின்னத்திரை சீரியலிலும் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலா என்ற கேரக்டரில் முதல் முதலாக நடித்தார். அதன் பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதைத் தொடர்ந்து காயத்ரிக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அரண்மனை கிளி, சித்தி 2, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்தி வீடு, மெல்லத் திறந்தது கதவு என பல சீரியல்கள் நடித்துள்ளார்.  சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடித்துள்ளார்.

சினிமா துறையில் வலம் வந்த காயத்ரி டான்ஸ் மாஸ்டர் யுவராஜை  காதலித்து  திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு  12 வயதில் தருண் என்ற  ஆண் குழந்தை உள்ளது. எப்போதுமே Instagram பக்கத்துல ஆக்டிவாக  இருக்கும் காயத்ரி யுவராஜ் அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்தும் அப்லோட்  செய்து  வருவார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையத்தில் பதிவிட்டார். இதற்க்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசையோடு காத்திருப்பதாகவும் இவர்கள் கூறி இருந்தனர். அதுபோலவே இவருக்கு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. 12 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது என்று உருக்கமாக காயத்ரி யுவராஜ் பதிவிட்டு இருந்தார்.

அந்த பெண் குழந்தைக்கு யுகா என்ற பெயரையும் வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை தற்போது காயத்ரி  தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு பலரும் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

Mahalakshmi

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

9 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

10 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

10 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

10 மணத்தியாலங்கள் ago