தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி மாறி மாறி கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வர முக்கிய பிரபலங்களும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி நேற்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். விரைவில் 2026 தேர்தல் வரவுள்ள நிலையில் அதில் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டுமென தான் நினைக்கவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அத்துடன் திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமகவும் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…