கிருஷ்ணர் அவதரித்த நாளான ஜென்மாஷ்டமி நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் பக்தியுடன் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் விரதம் இருந்து மாலை நேரத்தில் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். வடமாநிலங்களில் ஜென்மாஷ்டமி நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணன் பிறந்த நேரமான நள்ளிரவு வரை விரதம் இருந்து பூஜை செய்து விரதத்தை முடிக்கின்றனர். இந்த ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில விஷயங்களை செய்யக்கூடாது.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தன்று நள்ளிரவு 12 மணி அளவில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகின்றது. தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் இரவு நேரத்தில் பெரும்பாலும் பூஜைகள் செய்யப்படுவதில்லை. மாலை நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின் போது பழங்களை உட்கொள்ளாமல், சமைத்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டும். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்த பிறகு விரதம் இருக்கலாம்.
காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்க வேண்டும். பிறகு கிருஷ்ணர் சிலையின் அல்லது படத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றலாம். ஒரு துளசி இலையை வைத்து விரதம் இருப்பதற்கான உறுதி மொழியை மனதில் ஏற்றுக்கொள்ளலாம். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். விரதத்தின் போது தானியங்கள் மற்றும் உப்பு சாப்பிட வேண்டாம். அசைவ உணவை தவிர்க்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை முறைப்படி பூஜை செய்து முடித்த பிறகு விரதத்தை முடிப்பது நல்லது.
காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் முறைப்படி கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும். கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது. இது விரதத்தின் முழு பலனையும் தரும். இந்த நாளில் கருப்பு ஆடைகளை அணிய வேண்டாம். வழிபாட்டில் கருப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…