நடிகை கனகா வீட்டில் நள்ளிரவில் பெரும் சோகம்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்… ஆழ்ந்த இரங்கல்…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனகா. ஏராளமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த கனகா ஒரு கட்டத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காணாமல் போய்விட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் நடிகை கனகாவின் தந்தையும் ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனருமான தேவதாஸ் (88) உடல் நலக்குறைவால் காலமானார்.

கனகா மீது வெறுப்பு இருந்தது.. இப்போது வந்தாலும் ஓகேதான்.. 88 வயது தந்தை  உருக்கம் | Actress Kanaka's Father Emotional Interview, here are details -  Tamil Filmibeat

   

கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திரைப்பட தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் சுந்தரராமனின் மகனான தேவதாஸ் நடிகை தேவிகாவை காதல் திருமணம் செய்து கொண்டு பிறகு பிரிந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் நடிகை கனகா. இவர் தனது தந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தேவதாஸ் மரணம் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.