குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வுகளின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கலந்தாய்வுக்கான அழைப்பானையை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் இதர விவரம் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வை தவறவிட்டால் மறு வாய்ப்பு இல்லை என்றும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.