தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழில் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதற்கு முன்னதாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஜோடி போட்ட நடித்து இருக்கின்றார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கருங்காப்பியம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த காஜல் அகர்வால் கொரோனா காலகட்டத்தில் தனது நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட காஜல் அகர்வால், பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

தெலுங்கில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

