நடிகை பல்லவியை காதலித்ததற்கு இதுதான் காரணம்… மனம் திறந்த அவன் இவன் ஐனஸ்…!!

By indhuramesh on ஜூன் 5, 2024

Spread the love

தமிழ் திரை உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி எம் குமார். அவன் இவன் படத்தில் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த போது படம் முழுவதிலும் ஐனஸ் ஐனஸ் என்று அழைக்கப்பட்ட அவர் இன்றும் அவன் இவன் ஐனஸ் என்று அழைக்கப்படுகிறார்.

அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளது. ஜி எம் குமார் அவர்கள் 1986 ஆம் ஆண்டு வெளியான அறுவடை நாள் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக களம் இறங்கினார். அந்த படத்தை தொடர்ந்து பிக்பாக்கெட், உருவம் இரும்பு பூக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

   

அதோடு உருவம் திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரித்ததும் ஜிஎம் குமார் என்பதால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார். பாரதிராஜா அவர்கள் இயக்கிய கேப்டன் மகள் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய ஜி எம் குமார் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

   

ஐனஸ்

 

மற்ற படங்களை காட்டிலும் அவன் இவன் படம் தான் அவருக்கு ஐனஸ் என்ற புது அடையாளத்தை கொடுத்தது. ஜி எம் குமார் தான் இயக்கிய அறுவடை நாள் படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறிய போது தான் இயக்கிய நான்கு படங்களும் தன்னை சிக்கலில் இழுத்துவிட்டபோது தன்னுடன் இருந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள். அந்த சமயத்தில் பல்லவி மட்டும்தான் தனக்காக இருந்ததாகவும் அதுதான் அவரை காதலித்து திருமணம் செய்ய காரணம் என்று கூறியுள்ளார்.