கவர்ச்சியில் தமன்னாவையே ஓரம்கட்டிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை… என்ன குத்தாட்டம் நீங்களே பாருங்க…

By Begam on சித்திரை 21, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவியா. இந்த சீரியலில்தனது திறமையான நடிப்பின்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

   

தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு திடீரென விலகினார்.  சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

   

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் ‘அரண்மனை 4’ படத்தின் ப்ரோமோ பாடலாக வெளிவந்து டிரெண்டிங்கில் உள்ள ‘ அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலுக்கு நடிகை தமன்னாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமராக நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)