இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான ‘காதல் கவிதை’ என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கேரக்டரில் நடிகை இஷா கோபிகர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் முழுவதும் ஒரு கவிதை மாதிரி இருக்கும். பிரசாந்த் மற்றும் இஷா கோபிகர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இதனை அடுத்து அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக இஷா கோபிகர் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக அவர் விஜய் உடன் ‘நெஞ்சினிலே’, விஜயகாந்த் உடன் ‘நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு இந்தியில் நடிக்க சென்றுவிட்டார். மிகவும் பிஸியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்தார். ஹிந்தியில் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் அவர் பல படங்களில் ஹிந்தியில் நடித்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் அயலான். சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த அயலான் திரைப்படம் இந்த வருடம் தீபாவளி என்று ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழில் அயலான் படத்தின் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.இது அவருக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரியாக அமையுமா?பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…