Connect with us

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

CINEMA

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். இன்று வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வருகின்றார். மேடை கலைஞனாக பலரையும் சிரிக்க வைத்த இவர் வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகின்றார். இவரது மூத்த மகள் இந்திரஜா ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்புதான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

   

பிகில் விருமன் உள்ளிட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் மதுரையில் தடபுடலாக நடைபெற்ற நிலையில் சென்னையில் பல முன்னணி பிரபலங்கள் இவர்களின் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

 

இதைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு பல வீடுகளுக்கு விருந்துக்கு சென்று இருந்தார்கள். தற்போது பிரபல நடிகையான சுஜா வருணி வீட்டிற்கு விருந்துக்கு சென்று இருக்கின்றார். சுஜா வருணியின் கணவர் சிவாஜி தேவ். இவர் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சிவாஜி கணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் என்பவரின் மகனும் ஆவார்.

இவர் சிங்கக்குட்டி புது முகங்கள் தேவை இதுவும் கடந்து போகும் வெளியிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை சுஜாவருனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளனர். இந்நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்தி தம்பதியை தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார் இந்திரஜா. அவர் அதில் தெரிவித்திருந்ததாவது நாங்கள் எங்களுக்கான மனிதர்களை இந்த உலகத்தில் சம்பாதித்துள்ளோம் என்று பதிவிட்டு இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top