நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் வித்யா பிரதீப். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் நடிப்பு மீதி இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் விளம்பர திரைப்படங்களின் நடித்து வந்த இவர் அதன் பிறகு அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, மாரி 2, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார். என்னதான் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு பக்கம் விஞ்ஞானியாகவும் கலக்கி இருக்கின்றார்.
இது பலருக்கும் தெரியாது, அதாவது இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் பட்டத்தை முடித்து இருக்கின்றார். பின்னர் சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் ஸ்டம்ப் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் படித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றார். தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த இவர் அவ்வபோது படங்களிலும் நடித்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாத ஒன்று. இவருடைய கணவர் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது இவர் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இவர்கள் கணவர் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார். தற்போது இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு திருமணமாகி விட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.