அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த பிரபல நடிகை யாருன்னு தெரியுதா..? அட இவுங்க தானா..?

By Begam

Published on:

சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில்  ஒருவராக வலம் வரும்  நடிகை ஹுமா குரேஷியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இவர் தமிழில் அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

   

முதன் முதலில் மாடல் அழகியாக இருந்த இவர் இதை தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பர படங்களில் நடிக்கும் போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அதன் பின் ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிய இவர் தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துடன் இணைந்து ‘பில்லா 2’ திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

இதை தொடர்ந்து தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் ‘காலா’ திரைப்படத்தில் நடித்து  பிரபலமானார். இத்திரைப்படம் சூப்பர் ஹிட்டாக இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்தது.தற்பொழுது இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் ‘ஆர்மி ஆப் தி டெட்’ ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அஜித்துடன் இணைந்து ‘வலிமை’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவரின் சிறுவயது புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.