Categories: சினிமா

விஜயுடன் பிகினில நடிச்சா கூட எனக்கு ஓகே தான்…! விஜயுடன் நடித்த பிரபல நடிகை ஓபன் டாக்…!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடித்த ” மனதை திருடி விட்டாய்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். இவர் 2001ம் ஆண்டு “நீலா” என்ற கன்னடப் படத்தில் முதலில் அறிமுகமானார் . மேலும் இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து அசத்திய காயத்ரி ஜெயராமன். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவை விட்டு விலகினார். அப்போது அவருக்கு அதிக படியான சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.

அதை மறுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்சமயத்தில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன் . இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற நாடகத்தில் தலைவாசல் விஜய் ,ரேவதி போன்ற பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் ஏப்ரல் மாதத்தில், விஜயுடன் வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா பணியாற்றினார். இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி வருகிறார் நடிகை காயத்ரி ஜெயராமன்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ஜெயராமன் விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை சொந்தரவு செய்கிறார்கள். ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது நமக்கு பாதுகாப்பாக இருக்கும். அவருடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது. விஜய் முன்னால் நான் பிகினி உடையில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago