வயதானவர் போல இருக்கும் இவரா ஹீரோ?.. கிண்டல் அடித்த தாய்லாந்து நடிகைக்கு சத்தம் இல்லாமல் எம்ஜிஆர் கொடுத்த பதிலடி..!

By Nanthini on மார்ச் 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 50 மற்றும் 60 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தது மட்டுமல்லாமல் திரையுலகையே கட்டி ஆண்டவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து அதன் பிறகு நடிகராக முன்னேறி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோவாக மாறினார். ஆரம்பத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்த எம்ஜிஆர் அதன் பிறகு ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். நடிப்புக்கு சிவாஜி என்றால் ஆக்ஷன் காட்சிகளுக்கு எம்ஜிஆர் என மாறிப்போனது. எம்ஜிஆர் படப்பிடிப்பிற்கு வந்தாலே அனைவரும் எழுந்து வணக்கம் சொல்வார்கள். இயக்குனர் முதல் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் சின்ன சின்ன துணை கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர்கள் என அனைவரும் அவரிடம் மரியாதையாக தான் பேசுவார்கள்.

எம்.ஜி.ஆரின் அரசியல் மாற்றத்தின் போது வெளியான திரைப்படம் மீண்டும் ரிலீஸ் |  Tamil cinema ulagam sutrum valiban movie again release

   

இப்படியான நிலையில் கடைபிடிப்பில் எம்.ஜி.ஆரையே ஒரு நடிகையை கிண்டல் செய்துள்ளார். அதாவது எம்ஜிஆர் அதிக பொருட்ச அளவில் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் என பல இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பை எம்ஜிஆர் நடத்தினார். இந்தப் படத்தில் லதா, மஞ்சுளா மற்றும் சந்திர கலாய் என மூன்று நடிகைகளை எம்ஜிஆர் நடிக்க வைத்தார். அது மட்டுமல்லாமல் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மெக்கா என்ற நடிகையும் நடித்திருந்தார். அவர் படப்பிடிப்பில் எம் ஜி ஆரை பார்த்ததும் இவரா இந்த படத்தின் ஹீரோ? மிகவும் வயதானவர் போல இருக்கிறாரே என்று மக்களாக கமெண்ட் அடித்துள்ளார்.

   

டிஜிட்டலில் வருகிறார் 'உலகம் சுற்றும் வாலிபன்' | டிஜிட்டலில் வருகிறார் 'உலகம்  சுற்றும் வாலிபன்' - hindutamil.in

 

ஏனென்றால் அப்போது எம்ஜிஆர் வேஷ்டி சட்டை மற்றும் கண்ணாடி தலையில் தொப்பி அணிந்து இருந்தார். மெக்கா அப்படி சொன்னதும் எம்ஜிஆர் காதில் அது விழுந்து விட்டது. இருந்தாலும் எம்ஜிஆர் எந்த ரியாக்ஷனும் செய்யவில்லை. மெக்கா பேசியதை கேட்ட பட குழுவினர் என்ன நீங்க இப்படி பேசிட்டீங்க நாளைக்கு படபிடிப்பில் அவரை பாருங்கள் என்று கூறியுள்ளனர். அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு பேன்ட் ஷர்ட் போட்டு கொண்டு விக் எல்லாம் அணிந்து இளமையான தோற்றத்தில் எம்ஜிஆர் வந்ததை பார்த்து மெக்கா வியந்து போய்விட்டார்.

mecha

அது மட்டுமல்லாமல் அன்று அவரை எம்ஜிஆர் துரத்துவது போல ஒரு காட்சியை படமாக்கப்பட்ட நிலையில் எம்ஜிஆருக்கு நிகராக அவரால் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை. அதனால் அந்த காட்சியை சுமார் நான்கு முறை ரீ டேக் செய்து படமாக்கப்பட்டது. இதனை கண்டு வியந்து போன மெக்கா எம்ஜிஆர் இடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வயதிலும் அனைவருமே வியக்கும் அளவுக்கு எம்ஜிஆர் தன்னுடைய உடலையும் வயோதிகத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.