தமிழ் சினிமாவில் கன்னிப்பருவத்திலே திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ராஜேஷ். தமிழ் மற்றும் மலையாளமாகிய பழமொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துள்ள இவர் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். முதலில் ஆசிரியராக பணியாற்றிய இவர் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்ததால் 1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இவர் அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு 1929 ஆம் ஆண்டு ராஜ் கண்ணு தயாரித்த கன்னி பருவத்திலே திரைப்படம் மூலமாக தான் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு கே பாலசந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் ராஜேஷ் நடித்திருந்தார். பிறகு இவர் குணச்சித்திர வேதங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் கமல்ஹாசன் உடன் சத்தியா, மகாநதி மற்றும் விருமாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஜோன் சிலிவியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு திவ்யா என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். இன்றும் ராஜேஷ் பல திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் ராஜேஷ் முன்னணி நடிகராக இருந்த காலத்தில் தான் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாக சேர்த்த மொத்த பணத்தையும் வைத்து சென்னையில் அரண்மனை போல ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி இருந்தார். அப்போது வீட்டின் கிரகப்பிரவேசம் அழைப்புக்கு அழைப்புகளோடு எம்ஜிஆரை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு ராஜேஷ் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் முதல்வராக இருக்கும் எம்.ஜி.ஆர் எப்படி நம்முடைய வீட்டிற்கு வருவார் என்று மனவேதனையோடு அங்கிருந்து திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருவதற்கு முன்பே எம்ஜிஆர் முதல் ஆளாக வந்துள்ளார்.
அப்போது ராஜேஷ் அழைத்து அன்று உன்னை என் வீட்டில் இரண்டு மணி நேரம் காக்க வைத்தேன் என்றால் அது ராகு காலம். நல்ல நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் அழைப்பிதழை நல்ல நேரத்தில்தான் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் உன்னை காக்க வைத்திருந்தேன். சுப காரியங்களோடு உனது வீடு அனைத்து செல்வ செழிப்போடு இருக்கும் என்று வாழ்த்தி விட்டு எம்ஜிஆர் அங்கிருந்து சென்றதும் ராஜேஷ் ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனாராம். எம்ஜிஆர் சொன்னது போலவே அரண்மனை போலிருந்து அந்த வீட்டை பல சூட்டிங் நடைபெற வாடகைக்கு விட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்தார் ராஜேஷ்.