கடந்த 1954 ஆம் ஆண்டு ஆர் எம் கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தூக்குத் தூக்கி. சிவாஜி, லலிதா மற்றும் பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி ராமநாதன் இசை அமைத்திருந்தார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும் சிவாஜிக்கு சி எஸ் ஜெயராமனும் பாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஓரிரு பாடல்கள் பாடும் வாய்ப்பு மட்டுமே டி எம் எஸ் க்கு கிடைத்துள்ளது. அதனைப் போலவே எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக கூட்டுக் கிளி படத்தில் நான்கு பாடல்களை டிஎம்எஸ் பாடியிருந்தார். இதனிடையே தூக்குத்தூக்கி படத்தில் பாடுவதற்காக டிஎம்எஸ் வாய்ப்பு கிடைத்து அவரும் பாடல் பதிவுக்காக சென்றுள்ளார்.
1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கே சி எஸ் ஜெயராமன் தான் பாடல்கள் பாடி வந்தார். ஆனால் தூக்குத் தூக்கி படத்தில் பாடுவதற்காக அவர் அதிக சம்பளம் கேட்டதால் பட குழுவினர் டி எம் எஸ் க்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்தப் பாடலைப் பாட வந்த போது சிவாஜி, எனக்கு சி எஸ் ஜெயராமன் தான் பாடிக் கொண்டிருக்கிறார், அவர் பாடினால்தான் நன்றாக இருக்கும் வேறு பாடகர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான படகு குழுவினர் இதனை டிஎம்எஸ் இடம் சொல்ல இந்த பழத்தில் பாட வேண்டும் என்று விதி இருந்தால் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு நான் இந்த படத்தில் மூன்று பாடல்களை இலவசமாக பாடி தருகிறேன், அதை நீங்கள் சிவாஜி இடம் போட்டு காட்டுங்கள் அவர் சம்மதம் சொன்னால் பாடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பட குழு டி எம் எஸ் குரலில் மூன்று பாடல்களை பதிவு செய்து அதை சிவாஜிக்கு போட்டு காட்டியுள்ளனர்.
முதலில் சாதாரணமாக கேட்ட சிவாஜி பிறகு தாளம் போட்டு பாடலை ரசித்தார். பாடல் முடிந்த பிறகு இதை யார் பாடியது என்று கேட்க மதுரையிலிருந்து வந்திருக்கிறார் பெயர் சௌந்தர்ராஜன் என்று அறிமுகம் செய்துள்ளனர். அப்போது டி எம் சௌந்தரராஜன் அழைத்த சிவாஜியின் அல்லா பாடி இருக்கீங்க இந்த படத்தில் மற்ற அனைத்து பாடல்களையும் நீங்களே பாடுங்கள் என்று கூறியுள்ளார். சுமார் 11 பாடல்கள் உள்ள இந்த படத்தில் எட்டு பாடல்களை டிஎம்எஸ் பாடியிருந்தார். இந்த படம் வெற்றி அடைந்த டிஎம்எஸ் க்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.