கசந்து போன 11 வருட திருமண வாழ்க்கை… விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட சூர்யா பட நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் 2004ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த  சூப்பர் ஹிட் திரைப்படம் ஆயுத எழுத்து. இத்திரைப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் என 3 முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஈஷா தியோல் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

eesha

இதை தொடர்ந்து, ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் தமிழ் படங்களில் அவர் அதிகம் நடிக்கவில்லை. நடிகை ஈஷா தியோல்பிரபல நடிகை ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா நட்சத்திர ஜோடிகளின் மூத்த மகளாக பிறந்தவர்.  முதன்முதலில் இவர் ஹிந்தி திரையுலகில் தான் கால் பதித்தார்.

   

பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர் 2012ல் பாரத் தக்தானி என்ற இளம் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு ராத்யா மற்றும் மிராயா என இரண்டு மகள்கள் உள்ளனர். 11 வருடங்கள் ஒன்றாக சேர்ந்த இவர்களுக்குள் தற்பொழுது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈஷா தியோல், பாரத் தக்தானி தம்பதி இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், ‘நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் மூலம், எங்கள் இரண்டு குழந்தைகளின் சிறந்த நலன்கள் மற்றும் எங்கள் நலன் மிகவும் முக்கியம். எங்கள் தனியுரிமை மதிக்கப்படுவதை நாங்கள் பாராட்டுகிறோம்’ என தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பயங்கர அதிர்ச்சியில் உள்ளனர்.