வடிவேலு செஞ்ச விஷியத்தால் மொத்தமாக ஒதுக்கி வைத்த அஜித்.. இருவரும் சேர்ந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர் வடிவேலு. கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதால், அதன் பிறகு அவரைப் படங்களில் நடிக்கவைக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர். அந்த தேர்தலில் வடிவேலு தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது தேமுதிக தலைவர் விஜயகாந்தோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது மிகவும் அநாகரிகமான முறையில் விஜயகாந்தை குடிகாரர் போல மட்டமாக சித்தரித்து பேசினார் வடிவேலு.  அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.

Raja Movie

விஜயகாந்த் போலவே வடிவேலு நடிகர் அஜித்திடமும் இதுபோல மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார். அதனால்தான் ஒரு கட்டத்துக்குப் பிறகு அஜித் தனது படங்களில் வடிவேலுவை முழுவதுமாக ஒதுக்கியுள்ளார். இருவரும் இணைந்து ஆசை, மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்திருந்தனர். கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் இயக்குனர் எழில் இயக்கிய ‘ராஜா’ திரைப்படம்தான். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித்தை மரியாதை இல்லாமல் வடிவேலு ஒருமையில் அழைத்து பேசியுள்ளார். இதை விரும்பாத அஜித் அவரிடம் நாசூக்காக அவரிடம் கூறினாராம். ஆனாலும் அதை பொருட்படுத்தாத வடிவேலு தொடர்ந்து அஜித்தை அவமரியாதை செய்யும் விதமாகவே பேசியுள்ளார்.

   
image 11

இதனால்தான் அஜித் அதன் பிறகு எக்காரணம் கொண்டும் தன் படத்தில் வடிவேலு இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தாராம். இயக்குனர் சுராஜ் தன்னுடைய மருதமலை படத்தின் கதையை முதலில் அஜித்திடம் கூறியுள்ளார். கதைக் கேட்டு பிடித்த அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். ஆனால் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பார் என சுராஜ் சொன்னதால் அந்த படத்தில் தான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.

x720