கடுமையான நோய் பாதிப்பால் இறந்த முதல் மனைவி… ஒரே வருஷத்தில் 2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் பாக்யராஜ்… திருமணத்தை நடத்தி வைத்தது யார் தெரியுமா..? 

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ்.  ’16 வயதினிலே’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி  தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் நடிகராக இதுவரை 75 படங்களுக்கு மேலும், இயக்குனராக  25 படங்களுக்கு மேலும் பணியாற்றியுள்ளார். தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   

நடிகர் பாக்கியராஜ்  நடிகை பிரவீணாவை 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரவீணா இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள்,பாமா ருக்மணி , ஆகிய படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் பாக்யராஜின் முதல் மனைவியான பிரவீனா  jaundice நோயால்  1983-ம் ஆண்டு மரணமடைந்தார்.

முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு ஒருவருடம் கழித்து நடிகர் பாக்யராஜ் முன்னணி நடிகை பூர்ணிமா ஜெயராமை 1984 திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். இவர்களது திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் முடிந்துள்ளதாம்.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பூர்ணிமா பாக்கியராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் பாக்யராஜின் 2 வது திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் யார் தெரியுமா..?  அந்த காலத்து முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி  இருவரும் தான். பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள் அந்த பதிவில் தங்களது திருமண புகைப்படத்தை பதிவு செய்ய தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு….