தமிழில் 2000ல் வெளிவந்த பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் நடிகை திவ்யா உன்னி. 1987ல் இருந்து படங்களில் நடித்து வரும் திவ்யா பெரும்பாலும் மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தமிழில் பாளையத்தம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இத்திரைப்படத்தின் மூலம் நடிகை திவ்யா உன்னிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர். ஆனால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் 2002ல் சுதீர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2017 விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்களுக்கு அருண் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். பின் கடந்த 2018 இல் அருண்குமார் என்பவரை நடிகை திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னி. சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ ‘பாளையத்து அம்மன்’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்? இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…