“அவன் தலையிலேயே அடித்தேன்… ரத்தம் கொட்டியது…!” பத்தாம் வகுப்பு டார்ச்சருக்கு.. நடிகை கொடுத்த மரண அடி..! ஷாக்கிங் பின்னணி…!!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

தென்னிந்திய சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான மற்றும் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். இவர் நடிப்பில் இதயம் முரளி, இம்மோர்ட்டால், I’m Game, The Paradise, மஞ்சணத்தி மற்றும் சூர்யா 48 என அடுத்தடுத்து பல முக்கிய திரைப்படங்கள் வரிசையாக உருவாகி வருகின்றன. இதில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சமீபத்தில் பேட்டியளித்த கயாடு லோஹர், தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்பிற்குச் செல்லும் வழியில் ஒரு பையன் அவரைத் தொடர்ந்து ஈவ்டீசிங் செய்துள்ளான். முதல் இரண்டு நாட்கள் சகித்துக் கொண்ட கயாடு, மூன்றாவது நாளும் அவன் எல்லை மீறி நடந்துகொண்டபோது கடும் கோபமடைந்துள்ளார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், உடனே அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்தப் பையனின் தலையிலேயே வீசியுள்ளார். இதில் அவனுக்குத் தலை உடைந்து ரத்தம் கொட்டியதை அடுத்து, கயாடு அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் சென்றுள்ளார்.

   

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், தன்னை நேரில் பார்ப்பதற்கு மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் தெரியலாம் ஆனால் தனக்கு அநீதி நடக்கும் போது சும்மா இருக்க மாட்டேன் என்று கூறினார். மேலும், பெண்கள் தங்களுக்கு எதிராக யாராவது தப்பு செய்தால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது என்றும், கண்டிப்பாகத் தைரியமாகத் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் பெண்களுக்குப் பளீர் அறிவுரை வழங்கியுள்ளார்.