தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர்கள்… ஆனா ஒரு கன்டிஷன்…. சி.டி.ஆர் கொடுத்த பகிரங்க எச்சரிக்கை… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தவெக கட்சியில் இணைபவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அவர்களுக்கு தவெக அரசு எந்த வடிவிலும் உதவாது என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊழல் அல்லது இதர குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் உள்ளவர்கள் அதனைச் சட்டப்பூர்வமாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கட்சியின் தலையீட்டை எதிர்பார்க்கக் கூடாது என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

குறிப்பாக, ஊழல் புகார்களுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்று தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், அமைச்சரின் இந்த காட்டமானப் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.