தமிழ் சினிமாவில் 50 மற்றும் 60 காலகட்டங்களில் மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் பானுமதி. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என அப்போதே பன்முக திறமைகளை கொண்டு கலக்கினார். இவரைப் பார்த்து சிவாஜி மற்றும் எம் ஜி ஆர் போன்ற நடிகர்களும் மிரல்வார்களாம். இவரிடம் எப்போதுமே அனைவரும் மிகுந்த மரியாதையுடன் தான் பேசுவார்களாம். நடிகர் திலகம் சிவாஜியே பானுமதி அம்மாவுக்கு முன் நான் ஒரு சின்ன பையன் என்று ஒருமுறை சொன்னார் என்றால் பானுமதி எவ்வளவு ஆளுமையுடன் இருந்திருப்பார் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். பானுமதி மிகுந்த சுயமரியாதை கொண்டவர். ஒரு படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு சரியான மற்றும் பொருத்தமான வசனங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அவருக்கு நல்ல காட்சிகள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்படத்தில் இருந்து விலகி விடுவார். அதனைப் போல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலருடன் சண்டை போட்டுக் கொண்டு பல படங்களிலிருந்தும் பானுமதி வெளியேறி இருக்கிறார். எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்திலிருந்தும் அப்படிதான் வெளியேறினார். பானுமதி அப்படி இருந்தும் படத்தின் வெற்றிக்கு பானுமதி தேவைப்பட்டதால் அவருக்கு பலரும் பணிந்து போனார்கள். இதற்கு ஏவியம் மெய்யப்ப செட்டியாரும் விதிவிலக்கு கிடையாது. ஏவிஎம் நிறுவனத்தில் பானுமதி நடித்த திரைப்படம் தான் அன்னை.
இந்த திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சில முடிவடைந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு பானுமதி அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இயக்குனர் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு அதிர்ச்சி அடைந்து இதனை செட்டியாரிடம் சொல்ல அவரோ அவரின் வீட்டுக்கு போய் அவருக்கு என்ன பிரச்சனை எனக் கேளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டார். அவர் சொல்லியபடியே இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோர் படத்தின் கதை ஆசிரியரை அழைத்துக் கொண்டு பானுமதியின் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது பானுமதி ஒரு காட்சியில் அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல வசனம் வருகிறது. சௌகார் ஜானகி கருத்து அந்த இடத்தில் ஓங்கி நிற்கிறது. ஆனால் நான் சும்மா நின்று கொண்டிருக்கின்றேன். எனக்கு நல்ல வசனத்தை எழுதிக் கொடுங்கள், சௌகார் ஜானகியின் கருத்துக்கு மேலாக என்னுடைய கருத்து அந்த படத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் நான் படத்தில் நடிப்பேன் என பானுமதி கண்டிஷன் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குழம்பிப்போன இயக்குனர்கள் மற்றும் வசனகர்த்தா ஆகியோர் சிறிது நேரம் யோசித்து பானுமதி கூறியது போலவே வசனத்தை எழுதிக் கொடுத்தனர். அதைப் பார்த்ததும் சந்தோஷம் அடைந்த பானுமதி மீண்டும் அன்னை படத்தில் நடித்து முடித்தார்