மக்களின் ஆரவாரம் ஒரு படத்திற்கு கிடைக்கும் சிறந்த அங்கீகாரம் என்றால் அது படத்திற்கு கிடைக்கும் விருதுகளும் மற்றொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. உலக சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கர் விருதுதான் படத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆஸ்கர் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது ஏ ஆர் ரகுமான் தான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற முதல் தமிழன் இவர்தான். தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனை படங்கள் ஆஸ்கர் விருதுக்கு சென்றுள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. தமிழ் சினிமாவில் ஆஸ்கர் விருதுக்கு சென்ற படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தெய்வமகன்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1969 ஆம் ஆண்டு வெளியான தெய்வமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காலகட்டத்திலேயே அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் சிவாஜியின் நடித்து அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கருக்கு சென்ற முதல் தமிழ் படம் சிவாஜியின் தெய்வமகன் திரைப்படம் தான்.
நாயகன்:
தெய்வமகன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு எந்த ஒரு தமிழ் படமும் ஆஸ்கருக்கு செல்லவில்லை. அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கருக்கு சென்ற படம் கமல்ஹாசன் நடித்த நாயகன். சிவாஜி கணேசனின் 18 வருட சாதனையை கமலின் நாயகன் திரைப்படம் முறியடித்தது. ஆஸ்கருக்கு சென்ற இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையை நாயகன் திரைப்படம் பெற்றது.
அஞ்சலி:
1990 ஆம் ஆண்டு ரகுவரன், ரேவதி, ஷாமிலி மற்றும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் அஞ்சலி. குழந்தைகளுக்கான சிறந்த படமாக அஞ்சலி திரைப்படம் பார்க்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றது.
தேவர் மகன்:
1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தேவர் மகன். அந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படமும் ஆஸ்கருக்கு சென்ற படமாகும்.
குருதிப்புனல்:
கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் திரைப்படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படமும் ஆஸ்கருக்கு சென்றது.
இந்தியன்:
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்டோ நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஆஸ்கருக்கு சென்றது.
ஹே ராம்:
கமல்ஹாசன், ஷாருக்கான், வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி மற்றும் ஹேமா மாலினி உள்ளிட்டோர் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படமும் ஆஸ்கருக்கு சென்றது.
இந்த படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலருடைய பாராட்டுகளையும் பெற்ற ஜீன்ஸ், விசாரணை மற்றும் கூழாங்கல் போன்ற திரைப்படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.