பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி கடந்த 2005-ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ரிலீசான சூப்பர் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்தார். அனுஷ்கா தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
. அதன் பிறகு விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன், சூர்யாவுடன் இணைந்து சிங்கம், அஜித்தின் என்னை அறிந்தால், ரஜினியின் லிங்கா ஆகிய படங்களில் அனுஷ்கா நடித்தார். அனுஷ்காவுக்கு பெரும் வரவேற்பை தேடித்தந்த படங்கள் அருந்ததி பாகுபலி. இந்த திரைப்படங்களில் அனுஷ்காவைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அனுஷ்கா ஏராளமான திரைப்படங்களில் நடித்து விட்டார். இப்போது அனுஷ்காவுக்கு 42 வயது ஆகிறது. இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்காவின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அனுஷ்கா திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.
திருமண ஏற்பாடுகள் சைலண்டாக நடைபெறுகிறதாம். ஆனால் இது குறித்து அனுஷ்கா தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இது உண்மை செய்தியா என்பதும் தெரியவில்லை. அனுஷ்காவுக்கு திருமணம் என ஏற்கனவே பலமுறை இணையத்தில் வதந்திகள் பரவியது. இந்த முறையாவது அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.