தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனிகா. இவர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.
இதைத் தொடர்ந்து பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அனிகா இதனால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் புட்டபம்மா என்ற திரைப்படம் வெளிவந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகை அனிகா தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நடிகை வெள்ளை நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…