Connect with us

CINEMA

நான் குட்டி பாப்பா இல்ல; I am Heroine.. மார்டன் டிரஸ்ஸில் போஸ் கொடுத்து இளசுகளை கவரும் குட்டி நயன்..!!

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் தமிழில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தார்.

   

அஜித்தின் ரீல் மகள் என ரசிகர்கள் அனிகாவை அழைத்தனர். கடந்த ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன புட்ட பொம்மா படத்தில் அனிகா ஹீரோயினாக களமிறங்கினார். அதன் பிறகு மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் அனிகா வயசுக்கு மீறிய காட்சிகளில் நடிப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ராயன் படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துஷாராவின் தங்கையாக அனிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிகா மார்டன் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top