Categories: சினிமா

‘ஒரு செந்தூரபாண்டியனா இருந்து விஜய் அத பண்ணனும்’.. ஓப்பனாக கோரிக்கை வைத்த விஜயகாந்துடன் நடித்த பிரபல நடிகை..

Spread the love

நடிகர் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்து போனார். தமிழ் திரையுலகமே அவரது மறைவால் சோகத்தில் உள்ள நிலையில், அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள், அவரது நினைவிடத்திலும், இல்லத்திலும் சென்று அஞ்சலி செலுத்தி வருவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் விஜயகாந்திற்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

#image_title

இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா, கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், சினிமாவில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் உயிருடன் இருந்தப் போது கூட, தனது மகனுக்காக யாரிடமும் சிபாரிசு செய்ததில்லை. அப்படியிருக்க, நடிகர் விஜய்க்காக எப்படி விஜயகாந்த் ஒரு செந்தூரப் பாண்டியன் படத்தில் நடித்து அவரது திரைவாழ்க்கையை தூக்கி விட்டாரோ, அதேப் போல சண்முக பாண்டியனின் சினிமா வாழ்க்கையை, நடிகர் விஜய் தூக்கி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

#image_title

அத்தோடு, சமீப காலமாக சினிமாவில் ஒரு ஹீரோ மட்டுமின்றி, பல ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கும் படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, சண்முக பாண்டியனுக்கு திரையுலகினர் வாய்ப்பு தர வேண்டும் எனவும், அதுவே நாம் விஜயகாந்திற்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என நடிகை அம்பிகா கேட்டுக் கொண்டுள்ளார். இதனை செய்வதன் மூலம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் மகிழ்ச்சியடைவார் எனவும் அம்பிகா கூறியுள்ளார். திரையுலகில் விஜய் அடியெடுத்து வைத்தப் போது அவருக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை.

#image_title

அந்த நேரம், உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த், செந்தூரப்பாண்டியன் என்ற படத்தில் விஜய்க்காக கேமியோ ரோலில் நடித்ததன் மூலம், விஜய் சினிமா உலகில் முன்னேறத் தொடங்கினார். அதேப் போல, விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில், அவருகு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயகுநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படி இந்த இரு குடும்பமும் ஒருவரை ஒருவர் திரையுலகில் வளர்த்து விட்டுக் கொண்டனர். அதனால் தான் விஜயகாந்தின் மறைவில் நேரடியாக கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் விஜய். இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் திரை வாழ்க்கையில் முன்னேற விஜய் உதவ வேண்டும் என அம்பிகா கோரிக்கை விடுத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Archana

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

6 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

6 மணத்தியாலங்கள் ago