சாப்பிடும் போது கூட இப்படியா..? அமலா பாலிடம் கணவர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…

By Begam on சித்திரை 12, 2024

Spread the love

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான ‘மைனா’ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்து  கொண்டிருக்கிறார்.

   

நடிகை அமலா பால் 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே அவருடன்கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை கேரளா மாநிலம் கொச்சியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 5 ல் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

   

 

 

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இவருக்கு  வளைகாப்பும் நடந்து முடிந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது கணவருடன் மகிழ்ச்சியாக ஜூஸ் சாப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர்கள் இருவரும் சிறுபிள்ளை போல ஜூஸ்-காக செல்ல சண்டை போடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘சாப்பிடும் போது கூட இப்படியா..? சண்டை  போடாம சாப்புடுங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)