சின்னத்திரை நடிகையான மீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்து வருகிறார். முன்னதாக 2014-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்தார்.

சூர்யாவின் என் ஜி கே படத்திலும் மீனா நடித்துள்ளார். இவர் ஏராளமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து சின்னத்திரை நடிகை மீனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு நகர செயலாளர் பால் துரை தலைமை தாங்கினார். சின்னத்திரை நடிகை கம்பம் மீனா ஜல்லிக்கட்டு காளையுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். இதில் முன்னாள் சேர்மன் ஜெயபிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

