இப்போ இது தேவ தானா..? கணவருடன் சேர்ந்து அமலா பால் நடத்தியுள்ள போட்டோஷூட்.. வீடியோ..

By Priya Ram on மார்ச் 31, 2024

Spread the love

பிரபல நடிகையான அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அமலா பாலுக்கு புகழைத் தேடித் தந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மைனா திரைப்படத்திற்கு பிறகு தான் அமலாபால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார்.

   

அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் விஜயுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என ஏராளமான முன்னணி நடிகர்களின் படத்தில் அமலா பால் நடித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை அமலா பால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டு அமலாபாலின் பிறந்தநாள் விழாவின் போது அவரது நண்பர் ஜெகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்தி அமலா பாலுக்கு மோதிரம் போட்டு விட்டார்.

அதன் பிறகு பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் அறிவித்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலபால் தனது காதல் கணவருடன் ஒரு magazine அட்டை படத்திற்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram