டேனியல் பாலாஜி திருமணம் பண்ணாததுக்கு காரணம் இதுதான்.. நெருங்கிய நண்பர்கள் பகிர்ந்த தகவல்..!!

By Priya Ram

Published on:

பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

   

அதன் பிறகு காக்க காக்க,  பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். சித்தி, அலைகள் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி இறப்பை அறிந்த இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் 48 வயதாகியும் நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து அவரது நண்பர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அவர்கள் கூறியதாவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். ஆன்மீகம், மக்களுக்கு சேவை செய்வது போன்றவற்றில் டேனியல் பாலாஜி ஆர்வமாக இருந்ததால் திருமணம் பற்றி அவர் அவ்வளவாக பேசியதில்லை என தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

author avatar
Priya Ram