நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ் தேன்மொழி பி.ஏ, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சூப்பர் ஹிட் சீரியல் நடித்துள்ளார். தற்போது அஸ்ரிதா ஸ்ரீதாஸ் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். இவர் ராகினி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ் மூன்று வயதில் நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் அப்பா அம்மா என்ற தொடரில் தான் அறிமுகம் ஆனார். அதன் பிறகு சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங் செய்து வந்துள்ளார்.
சுமார் 35-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் அஸ்ரிதா ஸ்ரீதாஸ் நடித்துள்ளார். தெகிடி, திருமணம் என்னும் நிக்கா, ஆறாவது சினம், என்னை அறிந்தால், சிக்ஸர், கொரில்லா, வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சீரியலில் சேலை அணிந்த ஹோம்லி பெண்ணாக வலம் வரும் அஸ்ரிதா ஸ்ரீதாஸ் தற்போது மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.